சுகாதார உதவியாளர்கள் சீருடை விவகாரம்:
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக நியமனம் பெற்றுள்ள முஸ்லிம் பணியாளர்கள் நமது மத கலாசார நடைமுறைகளுக்கேற்ற சீருடை அணிவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்ற விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம் ஒன்றினை NFGGயின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கி வரும் சட்டத்தரணிகளுடன் நேரடியாக நேற்று பேசி விபரங்களை பெற்றுக்கொண்ட அப்துர் ரஹ்மான் அவர்கள் பாதிக்கப்பட்ட பணியாளர்களையும் நேற்று நற்பிட்டிமுனையில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார்
அதேபோல இந்த விவகாரத்தை முன் நின்று கையாளும் சிவில் சமூக பிரதிநிதிகளோடும் சந்தித்து உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சர் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை அவர் அனுப்பி வைத்துள்ளார்.
பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட 23/2019(I) இலக்க சுற்று நிரூபத்தின் சரத்துகளுக்கு அமைவாக தமது மத கலாசார நடைமுறைகளுக்கு ஏற்ப சுகாதார உதவியாளர்கள் தனது சீருடைகளை அணிந்து கொள்ள முடியும் என்கின்ற விடயத்தை அமைச்சர் அவர்களுக்கு சுட்டிக்காட்டி இந்த விடயத்தை உடனடியாக தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
.jpeg)