Our Feeds


Tuesday, September 1, 2026

ShortNews

செப்டம்பர் 12க்கு முன்னதாக அரசு என்னை கைது செய்யலாம் - நாமல்!


செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணிக்கு பெருமளவான மக்கள் திரளுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்தால், அதற்கு முன்னதாக தன்னை சிறையில் அடைக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்திற்கு பெருமளவான மக்கள் வருவார்கள் என்பதை அரசாங்கம் உணர்ந்தால், அதற்கு முன்னதாக நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 5ஆம் திகதி முதல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நாடு முழுவதும் தொடர்ச்சியான பேரணிகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நடத்தி வரும் பேரணிகளால் உருவாகியுள்ள அரசியல் எழுச்சிக்கு அரசாங்கம் வழங்கும் பதிலாகும் என SLPP தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்க முயற்சிப்பதாகவும், தனது சொந்த பலவீனங்களை மறைப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »