Our Feeds


Wednesday, September 30, 2026

Zameera

எதிர்க்கட்சிக்குத் தேவையானவாறு செயல்பட நாங்கள் தயார் இல்லை

 


எதிர்க்கட்சிக்குத்  தேவையானவாறு செயல்பட நாங்கள் தயார் இல்லை என்று விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்த தெரிவித்தார்.


கண்டி, பொல்கொல்லையில்  நேற்று செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 


அனைத்து துறைகளும்,  முடங்கிப்போய் இருந்த ஒரு நாட்டையே நாம் ஏற்றோம். இப்போது அனைத்து துறைகளும்,  சிறப்பாக இயங்குகின்றன.


நாடு முன்னோக்கி செல்கிறது. எமது அரசாங்கம் மக்கள் ஆணையின்படி எமக்கு தேவையானவாறே செயல்படுகிறது, எதிர்க்கட்சிக்கு தேவையானவாறு செயல்பட நாங்கள் தயார் இல்லை. 


சர்வதேச மாநாடுகளுக்கு ஜனாதிபதி செல்வதில்லை என  சிலர் குறை கூறுகிறார்கள். எமது பணிகளுக்கு எமக்கு தேவையானவர்களையே நாங்கள் அனுப்புகிறோம். மாறாக எதிர்க்கட்சிக்கு தேவையானவர்களை நாங்கள் அனுப்புவதில்லை. 



எங்களைப் பார்த்துக் கொண்டிருக்காமல் சிதறிப் போயுள்ள எதிர்க்கட்சிகளை  ஒன்று திரட்டுமாறு நாங்கள் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.


எமக்கு  மக்கள் தந்த ஆணைக்கு அமைவாக நாங்கள் செயல்படுகிறோம். எதிர்க்கட்சிகள்  இன்னும் பாலர் பாடசாலையிலேயேதான்  உள்ளது. சற்று முன்னேறி வந்து எம்முடன் மோதுமாறுதான் நாம் கூறுகிறோம்.


அன்று மோசடி, ஊழல், இலஞ்சம், பாதாள உலகக் குழுக்கள் போன்ற இவற்றுக்கு  எதிராக செயல்படும் நிறுவனங்கள் அரசியல் செல்வாக்கு காரணமாக உறங்கத்தில்  இருப்பதைப் போல்தான் காணப்பட்டன.


தற்போது நீதிமன்றங்கள் ஊழலுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கும்போது, எதிரணியை  பழிவாங்குவதாக கூறுகிறார்கள்.  எமக்கு முன் ஆட்சிக்கு வந்தவர்கள்  ஒருபோதும்  திருடர்களைப் பிடிக்கவில்லை. 


இன்று மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, மோசடிக்காரர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எதிராக நியாயமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். 



சட்டத்தைச் செயல்படுத்தும்போது எமக்கு அனைவரும் ஒன்றுதான். எமது ஆட்களா, அவரின் ஆட்களா, இவரின் ஆட்களா என்ற பாகுபாடு எமக்கு இல்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »