Our Feeds


Monday, September 21, 2026

Zameera

ஆகஸ்ட் மாத பணவீக்கம் 8.1 சதவீதமாக உயர்வு

 


(இராஜதுரை ஹஷான்)


தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மாதாந்த நுகர்வோர் பணவீக்கத்தை முன்னிலைப்படுத்தி கடந்த ஆகஸ்ட் மாத்துக்காக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை வெளியிட்டுள்ளது.


இதற்கமைய கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம் 8.1 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.


கடந்த ஜூலை மாதம் 4.9 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் கடந்த மாதம் 6.6 சதவீதமாக  உயர்வடைந்துள்ளது. அதேபோல் உணவல்லாத பணவீக்கம் 9.2 சதவீதத்தில் இருந்து 9.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.


அதேபோல் கடந்த ஜூலை மாதம் 18.9 சதவீதமாக காணப்பட்ட போக்குவரத்து பணவீக்கம் கடந்த மாதம் 19.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »