Our Feeds


Monday, September 21, 2026

Zameera

ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புட்டினின் கட்சி முன்னிலை

 


ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புட்டினின் கட்சி முன்னிலை.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற தேர்தலில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையிலான ஐக்கிய ரஷ்ய கட்சி முன்னிலை வகித்து வருகிறது. 


செப்டம்பர் 18 முதல் 20 வரை நடைபெற்ற இந்தத் தேர்தலில், ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழவையில் உள்ள 450 இடங்களுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்றது.


ரஷ்ய தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இந்தத் தேர்தலில் 56.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 


தொடர்ந்து நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில், இதுவரை ஐக்கிய ரஷ்ய கட்சி 58 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம் கீழவையில் புட்டினின் கட்சி பெரும்பான்மையை தக்கவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, உக்ரைனிடமிருந்து கைப்பற்றியதாக ரஷ்யா கூறும் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஸபோரிஷியா பிராந்தியங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டமைக்கு உக்ரைனும் ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »