இது உலக நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மக்கா நகரின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள், ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மூலம் மக்காவில் தாக்குதல் நடத்த முயன்றும், மக்கா வான் எல்லைக்குள் நுழைவதற்குள் குறித்த ட்ரோனை சவூதி அரேபியா வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அதனையடுத்து, புனிதத் தலங்களின் பாதுகாப்பு எல்லையானது ஒரு "சிவப்பு எல்லைக்கோடு" என்று எச்சரித்துள்ள சவூதி, ஹவுதியின் தாக்குதல் முயற்சிக்காக தாம் பழிவாங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
ஹவுதி மறுப்பு
எனினும், மெக்காவை நாங்கள் குறி வைக்கவில்லை. மெக்கா நகர் மீது தாக்குதல் நடத்தவில்லை என ஹவுதி அமைப்பினர் மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஹவுதி அமைப்பின் உறுப்பினரான ஹசீம் அல்-ஆசாத் கூறும்போது, மெக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறப்படுவது பழைய பொய். இதற்கு முன்பும் இதேபோன்று கூறப்பட்டது. யாரும் முட்டாள்கள் கிடையாது என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளரான யாஹியா சரீயும் சவுதியின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவை ஜோடிக்கப்பட்டவை என்றும் பொய்கள் என்றும் கூறினார். நாங்கள் சவுதி ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறோம். ஆனால், இஸ்லாமிய புனித தலங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என தெரிவித்து உள்ளது.
