தமிழ் மொழியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு
📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍
தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்றை அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (03) வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திரு. எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் வழிகாட்டலிலான இந்த செயலமர்வு திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
திணைக்களத்தின் மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் வை. பரன்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ், வளவாளராக பங்கேற்று செய்தி அறைகளில் AI பயன்பாடு எனும் தொனிப்பொருளில் விரிவுரை நிகழ்த்தினார்.
அரசாங்க தகவல் பணிப்பாளர் உதவிப் பணிப்பாளர் எல்.பி. திலகரத்னவும் இதில் பங்கேற்றார்



.jpeg)

.jpeg)
.jpeg)
