Our Feeds


Friday, September 18, 2026

SHAHNI RAMEES

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிப் கட்டுப்பாட்டாளர் கைது!

 


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த

குற்றவாளி ஒருவருக்கு போலி கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிப் கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (17) குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வளாகத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட உதவிப் கட்டுப்பாட்டாளர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.


நாட்டில் தேடப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவர், போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகக் கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுக்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்தும், இந்த மோசடியின் பின்னணி குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசேட புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »