குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்படியான ஓட்டங்களாக பாபர் அசாம் 33 பந்துகளுக்கு 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்படி, 111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அதன்படி குறித்த போட்டியில் இலங்கை அணி 111 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
