கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் எரிவாயு தட்டுப்பாட்டை உருவாக்குவதற்காக தவறான ஆலோசனை வழங்கிய தொழிலதிபர் இன்று ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இருக்கிறார்.
அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உள்ள மனு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சார் எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர் முடிந்தால் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உள்ள மனுவை வெளியே எடுக்குமாறு நாங்கள் சவால் விடுக்கிறோம்.
இன்று அவரால் பிழைப்பு நடத்தும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களை வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன். இப்போது என்ன நடந்திருக்கிறது? இன்று இரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஒன்று எரிவாயு விநியோகம் இரண்டு வகைகளில் வருகிறது.
ஒன்று 'லாஃப்' நிறுவனம் மற்றையது 'லிட்ரோ' நிறுவனம். லிட்ரோ நிறுவனத்தில்தான் பிரதான விநியோகம் உள்ளதுடன் அதிகமான நுகர்வோர் பிரிவினரும் உள்ளனர்.
லாஃப் நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் ஒரு முனையத்தை அமைத்தது. அண்மையில் இதன் உரிமை மாற்றம் செய்யப்பட்டு அநுரகுமார திசாநாயக்கவின் மிகவும் நெருங்கிய பலமிக்க தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து கொள்வனவு செய்யப்பட்டது.
இந்த நிறுவனத்திற்கு ஈரானில் இருந்து எரிவாயு பெற்றதாகக் கூறி அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஆனால் அநுரகுமார திசாநாயக்க இது குறித்துப் பேசி இத்தடையை நீக்குவதற்கு எந்த விதத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இலங்கையின் எரிவாயு சந்தையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான அளவைப் பெற முடியாமல் ஒரு பிரச்சினை உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, October 27, 2026
கோட்டாவுக்கு சிக்கலை ஏற்பத்தியவர்கள் இன்று அநுரவுடன் உள்ளனர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
