Our Feeds


Thursday, October 29, 2026

Zameera

இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று நீதிமன்றில்

 

பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று வியாழக்கிழமை (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் நேற்று புதன்கிழமை (28) பிற்பகல் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லபிட்டிய, ஹொரனை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.


இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்படமூன்று பொலிஸ் அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.


அதனைத் தொடர்ந்து, மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே, பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த குற்றவியல் பிரிவுப் பொறுப்பதிகாரி நேற்றையதினம் பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »