பொலிஸ் அதிகாரி ஒருவர் தவறிழைத்தால், சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டால், சமூக விரோத அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக சட்டரீதியாகவும் ஒழுக்காற்று ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு அதிகாரியையும் விசேடமாகப் பாதுகாப்பதற்காக பொலிஸார் ஒருபோதும் செயற்படமாட்டார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப். யூ.வூட்லர் தெரிவpத்தார்.
இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கடந்த நாட்களில் பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகநபர்கள் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்த சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹோமாகம சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், சம்பவத்திற்கு முந்தைய நாள், சம்பவம் நடந்த நாள் மற்றும் மறுநாள் ஆகிய அனைத்து சாட்சியங்களையும் பதிவு செய்து, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் அவற்றைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், சிறப்பு விசாரணைப் குழுவொன்றிடம் (மேல் மாகாண தெற்குப் பிரிவின் சிறப்புப் படை) இந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Thursday, October 29, 2026
எந்தவொரு அதிகாரியையும் நாம் பாதுகாக்கப் போவதில்லை - உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
