Our Feeds


Monday, November 2, 2026

Zameera

சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி!

 


பல்லேகெலவிலுள்ள தும்பறை சிறையில் தப்பிக்க முயன்ற கைதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல்  சிறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறை ஆணையருமான செனக பல்லேதென்ன கூறுகையில், கைதி சிறைச்சுவருக்கு அருகிலுள்ள ஒரு பாதுகாப்பு அறைக்குள் ஏறி, அங்கு பணியில் இருந்த சிறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றார்.


தப்பிக்க முயன்ற கைதி மீது அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த கைதி, தும்பறை சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »