
Thursday, October 10, 2024

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இத்தாலி கடற்படை கப்பல்
இத்தாலி கடற்படைக்குச் சொந்தமான ‘PPA MONTECUCCOLI’ கப்பல் இன்று வியாழக்கிழமை (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
143 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் சுமார் 152 பணியாளர்கள் கடமை புரிகின்றனர்.
கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி அலெசாண்ட்ரோ ட்ரோயா ஆவார்.
கப்பலானது எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து மீண்டும் புறப்படவுள்ளது.
Friday, October 4, 2024
Thursday, August 22, 2024

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கு தீர்வு
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நீண்டகாலமாக நிலவும் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஸ்தாபனத்தின் போது புதிய சேவை அதிகாரிகளாக உள்வாங்கப்பட்ட 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாதிக்கும் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆரம்பகால சேவை அதிகாரிகளாக கருதப்படுவதற்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்குவதற்கான தொழில்சார் தீர்வு வழங்கப்பட்டதாகவும், இதனால் அவர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சின் இணக்கம் காணப்பட்டமை சாதகமான நிலை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Sunday, August 18, 2024

அரச ஓய்வூதியர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதல் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படும்
அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொதுநிர்வாக, காணி விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதத்துடன் ஒக்டோபர் மாதத்திலிருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையின் நகல் தேர்தல் ஆணையம், மற்றும் ஓய்வூதியத் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
Saturday, August 17, 2024

களுகங்கை நீர் மட்டம் அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுகங்கை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் புலத்சிங்கள, பாலிந்தநுவர மற்றும் மதுராவளை பிரதேச செயலர் பிரிவு மக்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுள்ளது.
