Our Feeds


Showing posts with label #news#world#breaking. Show all posts
Showing posts with label #news#world#breaking. Show all posts

Monday, October 28, 2024

Zameera

சொகுசு வாகனமொன்று மீட்பு

மாத்தறை - பாபுரண பிரதேசத்தில் சொகுசு வண்டியொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கெப் வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாகனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருடையது என தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனம் அரசு பகுப்பாய்வாளர் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை மாத்தறை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Friday, October 4, 2024

Zameera

முன்னாள் அமைச்சர்களின் பங்களாக்களில் குவிந்து கிடக்கும் தளபாடங்கள் - அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்


 பல முன்னாள் அமைச்சர்களுக்கு கொழும்பில் வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் பல நிறுவனங்களின் உடைமைகள் நிறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பொருட்களை மீண்டும் வழங்கும் வரை, இந்த பங்களாக்களை அரசால் ஏற்றுக்கொள்வது தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பொருட்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் பலர் பல அரசாங்க நிறுவனங்களை வைத்திருப்பதால், அந்த ஒவ்வொரு நிறுவனங்களிலிருந்தும் நாற்காலிகள், மேஜைகள், தொலைக்காட்சிகள் போன்ற தளபாடங்களை அவர்கள் அரச  பங்களாக்களுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் இதுவரை பத்து பங்களாக்கள் மட்டுமே கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. 

Friday, September 27, 2024

Zameera

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு


 நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்று (26) வெளியிட்டார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Friday, September 20, 2024

Zameera

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் செப்டெம்பர் 24ஆம் திகதி திறக்கப்படும்


 தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி விடுதியில் உள்ள மாணவர்கள் செப்டெம்பர் மாதம் 23ம் திகதி முதல் தங்களுடைய விடுதிகளுக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அண்மையில் தற்காலிகமாக மூடுவதற்கு நவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Monday, August 26, 2024

Zameera

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விதித்த தடை


 ஜனாதிபதித் தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரசு செலவில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.


அரசாங்க விமானங்கள் தேர்தல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


மேலும், தேர்தல் அல்லாத பிற கடமைகளுக்கு விமானங்களை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அரசாங்க விமானங்களை அவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Friday, August 23, 2024

Zameera

மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள்


 இன்று நாட்டின் தலைமைத்துவத்தை கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை என்றும், மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்தார்.

தனியொரு உறுப்பினராக பாராளுமன்றத்தில் செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றி முழு நாட்டினதும் வெற்றியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி நேற்று (21) கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.

அதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ் மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்கள் இணைப்பாளராக விக்டர் ஸ்டான்லி நியமிக்கப்பட்டார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த விக்டர் ஸ்டான்லி கூறியதாவது:

‘’வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஒன்றிணைந்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதியின் வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

கடந்த காலத்தில் எமது நாட்டில் இருந்த பிரச்சினைகள் அனைவரும் அறிந்ததே. நாட்டு மக்கள் வரிசைகள் இருந்தனர். இன்று நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. கடந்த காலத்தை மக்கள் மறந்துவிடக் கூடாது. இன்று நாட்டின் தலைமையை கோரும் சஜித் பிரேமதாச நெருக்கடியான நேரத்தில் நாடு மற்றும் மக்களைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தமை நாட்டிற்கு சிறப்பாக அமைந்தது. புதிய நம்பிக்கையையும் அளித்தது. அன்று நமது நாட்டு மக்கள் வீதிகளில் இறந்து கிடக்கும் யுகம் உருவாகியிருந்தது. குழந்தைகளுக்கு பால்மா பாக்கெட் வாங்கக்கூட முடியாமல் மக்கள் தவித்தனர். இவர்கள் படும் துயரத்தைப் பார்த்து எதிர்க்கட்சி தலைவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். மக்கள் கஷ்டப்படும் போது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவர்கள் அல்ல.

இப்போது அவர்களில் ஒருவர் நாட்டைத் தனக்குத் தருமாறு கேட்கிறார். இன்னொருவர் அவர் வெற்றிபெறுவார் என்கிறார். அன்று இவர்கள் எங்கே இருந்தார்கள்? ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்று அன்று நாடு இருந்த நிலையில் இருந்து இன்று இந்த நிலைமைக்கு மாற்றியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்நாட்டின் பொறுப்பை ஏற்றதும், வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று அறிவித்தார். அதை இன்று அவர் செயலில் நிரூபித்துள்ளார்.

எனவே, நாம் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்தாலும் நாட்டின் எதிர்காலம் மற்றும் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தீர்மானித்தோம். வடக்கு கிழக்கு மக்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.

எனவே, இந்த நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று இந்நாட்டின் இளைஞர் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல் ஒரு லிட்டரை 117 ரூபாய்க்கு வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் அரசியல் அலையில் சிக்கி மாறியது. இறுதியாக கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்குக் கொண்டு வந்து முழு நாடும் அழித்தது.

தற்போது “கோட்டா-2” உருவாகி வருகிறது. சிலர் வரிகளை முற்றிலுமாக இரத்து செய்வதாக கூறுகின்றனர். மற்றவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மாற்றப்படும் என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் சாத்தியமற்றது என்றுதான் கூற வேண்டும். எனவே, மீண்டும் அதே குழிக்குள் விழ வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் வெற்றிபெறாவிட்டால், இந்த நாடு மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்லும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, விசித்திரக் கதைகளிலோ அல்லது அலைகளிலோ ஏமாந்து இந்த நாட்டின் எதிர்காலத்தை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து, அவருடன் இணைந்து நாட்டை முன்னோக்