Our Feeds


Showing posts with label #updates #news#. Show all posts
Showing posts with label #updates #news#. Show all posts

Wednesday, January 17, 2024

News Editor

கொழும்பில் புதிய பஸ் சேவை


 இலங்கை போக்குவரத்துச் சபையானது “கொலோம்புரா டிரிப்ஸ்” எனும் விசேட பயணிகள் பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.

இந்த பஸ்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சாரதிகள், பஸ் நடத்துனர் மற்றும் சேவை வழங்குநர்கள் சேவையில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.

முதற்கட்டமாக கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நான்கு சுற்றுலா வளையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முன்னோடித் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில முக்கிய மத வழிபாட்டுத் தலங்களை இந்த சுற்றுலா வளையங்களில் இணைத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு வரலாற்று விடயங்களைக் காணும் வாய்ப்பை வழங்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

Tuesday, November 7, 2023

News Editor

களனிவெளி ரயில் சேவை பாதிப்பு




 மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

அத்தோடு பதுளை - கொழும்பு பிரதான வீதியின் பெரகல பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு, கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நெலுந்தெனிய மற்றும் உடுகும்புர பகுதிகளுக்கு இடையே மரம் முறிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

அத்தோடு கனமழையின் போது வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, November 1, 2023

News Editor

குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வு


 குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாயம் நிலவுகிறது என  நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் செக்கனுக்கு 8400 கன அடி நீர் விடுவிக்கப்படுகின்றது. 

Tuesday, October 31, 2023

News Editor

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை


 நாட்டின் பல பகுதிகளில் இன்று (31) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75க்கு  மில்லிமீற்றர் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tuesday, October 17, 2023

News Editor

வைத்தியசாலை செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிற்றூழியர் கைது


 வைத்தியசாலை செயலாளரை ஆபாச வார்த்தைகளால் தாக்கியதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் அங்கொட தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் சிற்றூழியர் ஒருவரை முல்லேரிய பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர்.

வைத்தியசாலை வளாகத்தில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தியசாலை செயலாளர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசிப்பதால், பாதுகாப்புக்காக இந்த அதிகாரி முல்லேரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிசார் விசாரணை நடத்தி இந்த சிற்றூழியரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

Saturday, August 26, 2023

News Editor

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!


 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க,

“குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரை சிறுவர்களாகவே அவர்கள் கருதப்படுகின்றார்கள். எனவே அவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி என்பன தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் எமது அரசாங்கமும் இவ்விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி வருவதுடன் பெண்கள் மற்றும் சிறுவர்களின் மேம்பாடு தொடர்பில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்படுகிறன.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே அந்தக் குழந்தையின் போசாக்கு குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், குறை போசாக்குள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், போசாக்கான உணவைப் பெறுவதற்கான கொடுப்பனவு அட்டை வழங்கும் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், பிரதேச செயலக ரீதியில் இந்தச் செயன்முறை முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஒவ்வொரு அரச தாய் – சேய் நல மத்திய நிலையங்களில் பதிவு செய்த, கர்ப்பிணித் தாய்மார்களுக்காக அங்கு நடைபெறும் கிளினிக்களுக்கு வருகை தருகின்றவர்களில் போசாக்குக் குறைபாடு உள்ளவர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்களுக்கு இந்தக் கொடுப்பனவு அட்டை வழங்கப்படுவதாகவும் இந்த வருடத்திற்கு மாத்திரம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொடுப்பனவு அட்டை வழங்குவதற்காக அரசாங்கம் 11 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று, பாடசாலை செல்லும் மாணவர்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு போசாக்கான காலை உணவை வழங்கும் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலும், இயலுமான வரை சிறுவர்களின் உணவு, சுகாதாரம், கல்வி போன்ற விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் இந்நாட்டில் இயங்கும் முன்பள்ளிகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுவர்களின் கல்வி மாத்திரமன்றி அவர்களுடன் பேணப்பட வேண்டிய உறவு மற்றும் அவர்களின் பாதுகாப்பு, தொடர்பிலும் அவசியமான பயிற்சிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், முன்பள்ளிகள் இயங்கும் சூழல், ஆசிரியர்களின் தகைமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதோடு அது தொடர்பில் சட்ட வரையறைகளை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், முன்பள்ளி ஆசிரியர்களின் கல்வித் தகைமை மாத்திரமன்றி பல வருடகால அனுபவத்தின் ஊடாக சிறப்பாக முன்பள்ளிகளை நடத்திவருபவர்களையும் இணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் கல்வித் தகைமை மற்றும் பயிற்சி பெற்ற ஒருவருடன் அனுபவமிக்க ஆசிரியர்களையும் ஒன்று சேர்த்து இந்த முன்பள்ளிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதுடன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

“இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை மட்டத்தில் சிறுவர்களை தெளிவூட்டுவது குறித்து பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் மாத்திரமன்றி சிறுவர்களுக்கு நிகழும் எந்தவொரு துஷ்பிரயோகம் தொடர்பிலும் அவர்கள் தமது பெற்றோரிடம் முறையிடத் தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே சிறுவர்கள் அதிகளவில் தமது நேரத்தைக் கழிப்பது பாடசாலைகளில் என்பதனால், பாடசாலைகளில் சிறுவர் உளவளத்துணை ஆலோசகர்களை நியமித்தல் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. சில பெண்கள் தங்களுக்கு இடம்பெற்ற துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட விரும்புவதில்லை. எல்லோர் முன்னிலையிலும் இவ்விடயங்கள் குறித்து கூறுவதற்கு பெண்கள் வெட்கப்படுகிறார்கள். அந்த வகையில், இவ்வாறான முறைப்பாடுகளை விசாரிக்கவென பொலிஸ் நிலையங்களில் தனியான அறைகளை ஒதுக்குவதுடன் தனியான மகளிர் பொலிஸாரையும் நியமிக்க வேண்டும்.

எனவே, அத்தகைய பெண்களைக் கையாள்வதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியுள்ளதுடன் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படவும் வேண்டும். மேலும், பெண்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் கொலைகள் தொடர்பாக, ஊடக நிறுவனங்கள் செய்திகளை வெளியிடும்போது யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுய ஒழுக்கத்தின் கீழ் செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.