Our Feeds


Showing posts with label #updates#news#new updates. Show all posts
Showing posts with label #updates#news#new updates. Show all posts

Monday, July 22, 2024

Zameera

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்படும்


 பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்காவிடின், பாணுக்கான கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்காவிட்டால், கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்படும் என இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Sunday, April 28, 2024

News Editor

நிதி அமைச்சு செயலாளரின் பதவிக்காலம் நீடிப்பு


 நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் அவரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Saturday, April 13, 2024

News Editor

கொழும்பு - மும்பை இடையே விமான சேவை


 இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

வாரத்திற்கு மூன்று தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போது சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திலிருந்து கொழும்பிற்கு இண்டிகோ எயார்லைன்ஸ் மூலம் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

விமானங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், இண்டிகோ எயார்லைன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக கருதப்படுகிறது.  

Tuesday, April 2, 2024

News Editor

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் இடைநிறுத்தம்


 72 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்களின் கல்வியாளர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Tuesday, October 17, 2023

News Editor

வைத்தியசாலை செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிற்றூழியர் கைது


 வைத்தியசாலை செயலாளரை ஆபாச வார்த்தைகளால் தாக்கியதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் அங்கொட தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் சிற்றூழியர் ஒருவரை முல்லேரிய பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர்.

வைத்தியசாலை வளாகத்தில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தியசாலை செயலாளர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசிப்பதால், பாதுகாப்புக்காக இந்த அதிகாரி முல்லேரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிசார் விசாரணை நடத்தி இந்த சிற்றூழியரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

Thursday, June 8, 2023

News Editor

ஹிக்கடுவை கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு


 ஹிக்கடுவை கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த நபர் நேற்று (07) நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு படையினரால் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 


29 வயதான குறித்த ரஷ்ய பிரஜை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.