Our Feeds


Showing posts with label education. Show all posts
Showing posts with label education. Show all posts

Tuesday, November 7, 2023

News Editor

களனிவெளி ரயில் சேவை பாதிப்பு




 மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

அத்தோடு பதுளை - கொழும்பு பிரதான வீதியின் பெரகல பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு, கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நெலுந்தெனிய மற்றும் உடுகும்புர பகுதிகளுக்கு இடையே மரம் முறிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

அத்தோடு கனமழையின் போது வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tuesday, August 15, 2023

News Editor

சீனாவில் கனமழை - நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு


 சீனாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. 


சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. 


வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


இந்த நிலையில் ஜியாங் மாவட்டம் ஹாஸ் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர்

Saturday, August 5, 2023

News Editor

கல்கிஸ்ஸ மற்றம் காங்கேசன்துறைக்கு இடையில் புதிய ரயில்!


 காங்கேசன்துறைக்கும் கல்கிஸ்ஸவிற்கும் இடையில் ‘யாழ்நிலா’ என்ற புதிய நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் நேற்று (04) இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அதன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

இம்மாதம் 18ஆம் திகதிக்கு பின்னர் நல்லூர் கோவிலின் திருவிழா காலத்தை முன்னிட்டு தினமும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

Saturday, June 17, 2023

News Editor

டிஜிட்டல் மயப்படுத்தப்படும் கல்வித்துறை


 கல்வித்துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்தவர்களுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Wednesday, June 7, 2023

News Editor

எம்.பியின் மீது ஏன் சட்டம் பாயவில்லை?


 விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் அண்மையில் பிடிபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் அமலாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) கேள்வி எழுப்பினார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

4.611 கிலோ தங்கத்தை (80 மில்லியன் பெறுமதி) கொண்டு வந்த நபருக்கு 70 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதனை செலுத்த முடியாமல் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

74 மில்லியன் பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வந்த போது பிடிபட்ட இந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு 7.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

போராட்டத்தின் விளைவா இது என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சபையில் அனைவரையும் அவமானப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், எம்.பி பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் குடிமகனுக்கு ஒரு கவனிப்பும், பாராளுமன்ற உறுப்பினருக்கு மற்றொரு கவனிப்பும் நடைமுறைப்படுத்துவது முறை மாற்றமா என கேள்வி எழுப்பிய அவர், இதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பின்னால் இருக்கும் மறை கரம் யாது? என கேள்வி எழுப்புவதாகவும், இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Thursday, March 2, 2023

News Editor

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் விலைகள் குறைந்தன!


 கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை  சந்தையில்  பெரிய வெங்காயத்தின் விலை  குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 95 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 130 ரூபாவாக இருந்தது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலையும் குறைந்துள்ளது.

கடந்த வாரத்தில் சுமார் 150 ரூபாவுக் கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை தற்போது 130 ரூபாவாக குறைந்துள்ளது.