Our Feeds


Showing posts with label gohomegota. Show all posts
Showing posts with label gohomegota. Show all posts

Tuesday, November 15, 2022

ShortNews

மே 9ம் திகதி கோட்டாவை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச பரபரப்பு



கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்தோடு, கோட்டை ஜனாதிபதி மாளிகை, மற்றும் அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்து அவற்றை ஆக்கிரமித்திருந்தனர்.

இதன்போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கொல்லும் திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Friday, November 11, 2022

SHAHNI RAMEES

#BREAKING: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேரும் விடுதலை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்

Tuesday, November 8, 2022

ShortNews

VIDEO: மூழ்கும் கப்பலில் இருந்து 300 பேர் உயிருடன் மீட்ப்பு - மீட்க்கப்பட்டவர்களை வியட்னாமுக்கு அழைத்து செல்கிறது சிங்கப்பூர் கடற்படை.



கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே இலங்கை கடற்படையினருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியும்.

எனினும் ஏனையவர்கள் யார் என்ற விடயம் வியட்நாமில் தரையிறங்கிய பின்னரே கண்டறியப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீண்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க இலங்கையர்கள் சில சமயங்களில் அபாயகரமான சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டனர்.

தற்போது இலங்கையர்கள், பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்து வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வருகின்ற நிலையிலேயே இந்த சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Thursday, September 8, 2022

ShortNews

பட்டியல் இணைப்பு - இராஜாங்க அமைச்சர்களாக 37 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!



இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (08) இடம்பெற்றது.


இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் சியம்பலாப்பிட்டி , லசந்த அழகியவண்ண ஆகியோரும் ஜனாதிபதி முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டோர் விபரம் வருமாறு

ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர், 


ரஞ்சித் சியபலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர், 


லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர், 


திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர், 


ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர், 


கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர், 


மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்,


ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர், 


விஜித பேருகொட – பிரிவெனா கல்வி இராஜாங்க அமைச்சர்,


லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்,

தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர், 


இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர், 


சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர், 


சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர், 


சாந்த பண்டார – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர், 


அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர், 


சதாசிவம் வியாழேந்திரன் – வர்த்தக இராஜாங்க அமைச்சர், 


சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர், 


பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர், 


பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர், 


டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர், 


டி.பி.ஹேரத் – வள அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர், 


ஷசீந்திர ராஜபக்க்ஷ – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர், 


சீதா அரம்பேபொல, காதர் மஸ்தான் – கிராமிய அபிவிருத்தி இராஜாங் அமைச்சர், 


அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர், 


அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர், 


கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர், 


சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்,


அனுப பாஸ்குவால், சமூக அதிகாரமளித்தல் இராஜாங்க அமைச்சர், 


சிவநேசதுரை சந்திரகாந்தன் -கிராமிய வீதி அபிவிருத்தி, 


டைனா கமகே -சுற்றுலா, 


சாமர தசநாயக்க -ஆரம்ப கைத்தொழில்,


அருந்திக பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, 


செஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர்,


பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

Wednesday, August 31, 2022

SHAHNI RAMEES

BREAKING: நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு..!

 

நீர்கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் சற்றுமுன்னர்

Monday, August 22, 2022

SHAHNI RAMEES

சீனாவுக்கு மீண்டும் புறப்படுகிறது “யுவான் வாங் 5” கப்பல்..!

 

நாட்டை வந்தடைந்த சீன ஆராய்ச்சிக் கப்பல்