Our Feeds


Thursday, October 24, 2019

www.shortnews.lk

முனாஜித் மௌலவி ஐந்து மாதங்களின் பின்னர் பினையில் விடுதலை

 


இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றநிலையில் அது தொடர்பாக சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை  முகநூல் மூலமாக வெளியிட்டிருந்த மௌலவி எம்.கே. முனாஜித்திற்கு வவுனியா மேல் நீதிமன்றினால்  பிணை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா  செட்டிக்குளத்தைச் சேர்ந்த குறித்த மௌலவி  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற நாளில் மத்திய கிழக்கு நாடொன்றில் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்தவாறே முகநூல் மூலமாக குறித்த காணொளியை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்பிய போது கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யபட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஜந்து மாதங்களிற்கு பின்னர் வவுனியா மேல் நீதிமன்றால் அவருக்கு நேற்றுமுன்தினம் (22.10.2019) பிணை வழங்கபட்டு நீதிமன்ற நடைமுறைகளிற்கு பின்னர் நேற்று (23.10.2019) பிணையில் விடுவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »