நான் இடம் எடுத்த வகையிலோ அல்லது வேறு எந்த வகையிலோ மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நான் சவால் விடுக்கிறேன்.
நான் அமைச்சராக இருக்கும் போது பயங்கரவாதி ஸஹ்ரான் சதோச வாகனங்களை பயன்படுத்தியதாக என்மீது அபாண்டம் சுமத்தினார்கள் இப்போது அந்த குற்றச்சாட்டுக்கு என்ன நடந்தது? எனது அமைச்சு வாகனங்களை ஸஹ்ரான் பயன்படுத்தியிருந்தால் அதனை விசாரனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே? சிங்கள மக்களை தவறாக வழி நடத்தி அவர் ஆதாயம் தேட முயல்கிறார் விமல் வீரவன்ச.
அமெரிக்காவிலோ வேறு எந்த நாட்டிலோ எனக்கு வங்கிக் கணக்குகள் கிடையாது.
என்னிடம் பல காணி உறுதிகள் இருப்பதாக கூறப்படுவதெல்லாம் பச்சை பொய்யாகும். அப்படி ஏதும் காணி உறுதிகள் என்னிடம் இருந்தால் அவற்றையெல்லாம் அரசுடைமையாக்குங்கள் என்று பல முறை நான் கூறியிருக்கிறேன்.
சதோசவில் நான் மோசடி செய்தாக கூறப்பட்டது அவற்றையும் நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.
எனது நற்பெயரை கெடுத்ததற்காக விமல் வீரவன்சவுக்கு எதிராக 100 கோடி மான நஷ்டஈடு கேட்டு என் சட்டத்தரணிகள் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் குறைந்தது 10 பேர் எனது கட்சியில் வெற்றிபெருவார்கள் என இதன் போது ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
