இன்று உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியா பயணிக்கிறார். பிரதமருடன் அமைச்சர்களான டக்லஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் மற்றும் பிரசன்ன ரனதுங்க ஆகியோரும் பயணிக்கின்றனர்.
இந்திய வீடமைப்புத் திட்டம், மீனவர் பிரச்சினை மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம் ஆகியவை தொடர்பில் இந்த பயணத்தில் பேசப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
