சார்க் நாடுகளின் தலைவர்களுடனான விசேட வீடியோ கான்பரன்ஸிங் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி கோத்தபாய கீழ்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கூட்டம் அதிகமாகும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். சமயங்களின் தலைவர்களின் கோரிக்கையினால் வழிபாட்டு தளங்களில் மக்கள் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
விஸா நடைமுறைகளை நிறுத்தி பயணக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளோம். பொது போக்குவரத்திலும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
வெளினாடுகளில் இருந்து வரும் இலங்கை பிரஜைகளை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அவர்களை 14 நாட்கள் விசேட மருத்துவ முகாமில் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றோம்.
பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களை மூடியுள்ளதுடன், மக்கள் கூடுவதற்கு தடை விதித்துள்ளோம்.
முதலில் அடையாளம் காணப்பட்ட சீன பெண்மணி குணமடைந்து நாடு திரும்பினார். பின்னர் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொழும்பில் விசேட வைத்தியசாலை ஒன்றின் மூலம் சிகிச்சைகளை முன்னெடுப்பதுடன், 24 மணி நேரம் ஶ்ரீயல்படும் விசேட ஶ்ரீயலணி ஒன்றையும் உருவாக்கியுள்ளோம்.
