Our Feeds


Saturday, August 29, 2020

www.shortnews.lk

கைகொடுத்தது தமிழர் என்பதை மறந்துவிட வேண்டாம் - சஜித்திற்கு த.தே.கூ MP பதில்

 

செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்! | Tamil Page


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல்  தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது. எமது மண்ணுக்கும் மொழிக்கும் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாக நாம் இழந்தவை பல, இனியும் பல தியாகங்களை செய்யவும் தயாராக உள்ளோம். 


இந்த விடயத்தில் நாம் ஆதரித்த அணியே இன்று எமக்கு எதிராக குரல் எழுப்புகின்றது வேதனையளிக்கிறது, நீங்கள் பலவீனமாக இருந்த காலத்தில் தமிழர்களே உங்களுக்கு கொடுத்தனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரச இடைக்கால கணக்கறிக்கை மீதான் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவற்றை கூறினார். அவர் மேலும் தெரிவித்ததானது.


விக்கினேஸ்வரன் ஐயா தனது உரையில் தமிழ் முன்னுரிமை குறித்து பேசிய போது எதிர்க்கட்சி அதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்துவது வேதனையளிக்கிறது. தமிழ் மக்கள் நம்பிக்கையோடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தனர். என்னுடைய மண்ணை எனது மொழியை பாதுகாக்கும் விடயத்தை எவரும் தடுக்க முடியாது. எனது மொழி தமிழ் மொழி என்பதை கூறுவதிலும் முதன்மை மொழி என்பதையும் கூறுவதில் பெருமை உண்டு. சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் எமக்கு தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் கொடுக்கின்றது. 


எமது மண்ணுக்கும் மொழிக்கும் முன்னுரிமை கொடுத்ததின் காரணமாக பல விலைகொடுத்துள்ளோம். இனியும் பல தியாகங்களை செய்யவும் தயாராக உள்ளோம். நீங்கள் பலவீனமாக இருந்த காலத்தில் தமிழர்களே உங்களுக்கு கைகொடுத்து கௌரவத்தை ஏற்படுத்தினர் கொடுத்தனர் என்பதை மறந்துவிட வேண்டாம். எமது மொழியை இழிவுபடுத்த வேண்டாம். அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனமாக இருந்தாலும் கூட நாம் ஆதரித்த அணியே இன்று எமக்கு எதிராக குரல் எழுப்புகின்றது வேதனையளிக்கிறது.


அதேபோல் நாம் அரசாங்கத்திற்கு ஒன்றினை கூறிக்கொள்ள விடும்புகின்றோம், இந்தியா எப்போதுமே எமக்கான நிற்கும் நாடு. அவ்வாறு இருக்கையில் இன்று ஆளும் தரப்புடன் செயற்படும் பெளத்த பிக்கு சிலர் இந்தியாவை மிகவும் மோசமாக விமர்சிப்பதை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். ஏனைய ஆண்டுகளுடன் அரசாங்கம் எவ்வாறு நட்புறவை கையால்கின்றதோ அதேபோல் இந்தியாவையும் கையாள வேண்டும் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »