Our Feeds


Wednesday, September 16, 2020

www.shortnews.lk

நவ்பர் மவ்லவி 19 வருடங்கள் கட்டாரில் இருந்து கொண்டு பல தீவிரவாத அமைப்புகளுடனும் தொடர்புகளை பேணியுள்ளார் - SIS முன்னால் பணிப்பாளர்

 



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமா அத் இயக்கத்தின் கோட்பாட்டாளர் நௌபர் மௌலவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் முன்னிலையில் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக ஆஜரானார்.

நௌபர் மௌலவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் காலை 9.30 மணி முதல் ஏறத்தாழ 6 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

கடந்த ஜூலை 28 ஆம் திகதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் மத்திய புலனாய்வு சேவையின் (எஸ்ஐஎஸ்) முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன, நௌபர் மௌலவியே பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி என்பதை வெளிப்படுத்தினார்.

மத்திய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த தெரிவிக்கையில், தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் நிறுவனர் சஹ்ரான் ஹாசிம் அல்ல மாறாக நௌபர் மௌலவியே இருந்ததாகக் கூறினார்.

நௌபர் மௌலவி 19 வருடங்களாக கட்டார் நாட்டில் வசித்ததுடன் வெவ்வேறு சர்வதேச குழுக்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வந்ததாகவும் தமிமீழ விடுதலைப் புலிகளின் கோட்பாட்டாளர் அன்ரன் பாலசிங்கத்தைப் போன்ற பாத்திரத்தை வகித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »