Our Feeds


Monday, October 26, 2020

www.shortnews.lk

16வது கொரோனா மரணம் பற்றி மேலதிக முழு தகவல் இதுதான்

 

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 16ஆவது நோயாளி மரணமாகியுள்ளார்.

கொழும்பு 02 ஐச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவரே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, 70 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இன்று (25) அதிகாலையளவில் குறித்த நபர் மரணமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், இரத்தத்தில் கிருமி நுழைந்தமை தொடர்பான சிக்கல் நிலை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை (23), கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிக்கல் நிலைமை காரணமாகவே அவர் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக நேற்று (24) இலங்கையில் 15ஆவது கொரோனா மரணம் பதிவாகியிருந்தது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்

1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.
3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்
7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.
12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.
13ஆவது மரணம், செப். 14ஆம் திகதி, 60 வயதான, பஹ்ரைனிலிருந்து வந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
14ஆவது மரணம், ஒக்டோபர் 22ஆம் திகதி, 50 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
15ஆவது மரணம், ஒக்டோபர் 24ஆம் திகதி, 56 வயதான, குளியாபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
16ஆவது மரணம், ஒக்டோபர் 25ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 02 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 7,872 பேரில் தற்போது 4,053 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 3,803 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 16 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 537 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »