மினுவங்கொட கொவிட் கொத்தணியின் முதலாவது முதல் இரண்டாவது தொற்றாளர் வரையில் பரவிய விதம் தொடர்பில் கண்காணிக்கப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றை தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 26 பேர் மினுவங்கொட பகுதியையும், 23 பேர் கம்பஹா பகுதியையும் மற்றும் 22 பேர் திவுலுபிட்டிய பகுதியையும் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பில் இருவர், பொலன்னறுவையில் இருவர், மாத்தளையில் ஒருவர் மற்றும் பானந்துறையில் ஒருவர் என பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்தது ஒருவரேனும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் 522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் எனவும் வைரஸ் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் சமூகமயப்படுவது மக்கள் நடந்து கொள்ளும் விதத்திலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது கொரோனா தொற்றாளர் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும் தற்போதைய தகவல்களுக்கு அமைய கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் குறித்த கைத்தொழிற்சாலையில் இருந்து சிலர் சுகவீனமுற்று இருந்ததாக தெரிவித்துள்ளார்.