மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல்
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 37 காவல்துறை அதிகார
பிரதேசங்களிலும் கொழும்பு மாவட்டத்தில் 21 காவல்துறை அதிகார
பிரதேசங்களிலும் களுத்துறை மற்றும் குளியாபிட்டி காவல்துறை பிரிவுகளில் தலா 10 காவல்துறை அதிகார பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த 68 காவல்துறை அதிகார பிரதேசங்களுக்குமான தனிமைப்படுத்தல்
ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 5 மணி முதல் தொடர்ந்தும்
அமுலில் இருக்கும் என காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான
அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நேற்றிரவு முதல் மேல் மாகாணத்தில் இருந்து
வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களை முன் அறிவிப்பு இன்றி கைது
செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி
காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.