ICBT கொழும்பு, கெம்பஸ் மாணவனுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக ICBT நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை கற்கை செயல்பாட்டுக்காக வருகை தந்த மாணவருக்கே மேற்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த அன்று கற்றல் செயல்பாடுகளுக்காக வருகை தந்தவர்கள் உடனடியாக அரசின் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் ICBT நிர்வாகம் அறிவித்துள்ளது.
