
மினுவங்கொட பொலிஸ் நிலையத்தின் சிற்றூண்டிச்சாலையை ஒப்பந்த அடிப்படையில் நடத்திச் சென்ற நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் மகன் மினுவங்கொட பிரண்டிக்ஸ் தொழிந்சாலையின் ஊழியர் என்பதுடன் அவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த சிற்றூண்டிச்சாலையை முன்னெடுத்து சென்றவருடன் தொடர்புடையவர்களை இனங்கண்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மினுவங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.