கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஆனால் முஸ்லிம் தரப்பிலிருந்து அரசாங்கம் யார் பேச்சை கேட்கிறது. உலமா சபையின் பேச்சை கேட்க்கிறதா? அல்லது தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சை கேட்கிறதா? ஏனென்றால் உலமா சபையினர் கொரோனாவில் மரணித்த உடல்களை எரித்த சாம்பலை தாருங்கள் என கேட்டிருந்தார்கள் அவர்களுக்கு அது வழங்கப்பட்டு விட்டது.
கொழும்பில் இன்று - 10.11.2020 நடத்திய ஊடக சந்திப்பிலேயே ஞானசார தேரர் இதனை தெரிவித்தார்.