சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்-கல்வி அமைச்சின் செயலாளர்
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பாடசாலைகளை ஆரம்பிக்க முடியுமா என ஒத்திகை பார்ப்பதற்காக அல்ல எனவும், கொரோனாவை கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கால்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.