கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிக்காது அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் தரப்பால் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அடக்கம் செய்வது தொடர்பில் அழுத்தமான முடிவெடுப்பதில் அரசு தடுமாறி வருகின்றது.
கடந்த வாரம் அமைச்சரவையில் இதுபற்றி பேசப்பட்ட விடயங்கள் பகிரங்கமானதை அடுத்து சிங்கள அமைப்புகளும், தேரர்களும் இந்த விடயத்தை பேசுபொருளாக்கியிருப்பதால் இவ்விடயத்தில் உடனடி தீர்மானங்களுக்கு வராதிருக்க அரசு உத்தேசித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த விடயத்தில் அரசினால் ஒன்றும் செய்ய முடியாது. சுகாதார துறை அதிகாரிகளே இதில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். அவர்கள் செய்யும் சிபாரிசுகளே இறுதி முடிவாக கொள்ளப்படுமென்று அரசாங்கத்தின் உயர் மட்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இன்றைய (17) தமிழன் நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.