Our Feeds


Wednesday, December 2, 2020

www.shortnews.lk

புரவி புயல் அணர்தத்தை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ முப்படையும் தயார் - இராணுவ தளபதி

 



அனர்த்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் முப்படையினரும் தயாராக உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் செலவில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீட்டினையும், வீட்டு தளபாடங்களையும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பயனாளியிடம் கையளித்தார். 

அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள புயலுடன் கூடிய அனர்த்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர். 

அனர்த்தம் ஏற்படும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் மீட்பு மற்றும் மனிதாபிமான பணிகளில் ஈடுபட தயாராகவுள்ளனர். 

அத்துடன் கொவிட் - 19 தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆயுர்வேத வைத்தியர் ஒருவரால் கொவிட் 19 தெற்றுக்கு எதிரான மருந்து கணடுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அது தொடர்பில் ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறியுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

எனவே நாம் அதனை ஆய்வு செய்து வருகின்றோம். அதன் பின்னரே அது தொடர்பில் உறுதியாக தெரிவிக்க முடியும் எனக் கூறினார். 

குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, வன்னிப் படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »