Our Feeds


Sunday, February 21, 2021

www.shortnews.lk

கொரோனாவில் இன்று 10 பேர் மரணம் - ஹட்டன், வெள்ளவத்தை, குருதலாவ உள்ளிட்ட பகுதியில் மரணங்கள் பதிவு - முழு விபரம் இணைப்பு

 


 

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக 10 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

உயிரிழந்தோர் தொடர்பான விபரங்கள்

01.கொழும்பு − கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

02.வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

03.களுத்துறை பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண்ணொருவர், கடந்த 16ம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

04.வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவர், தனது வீட்டிலேயே அவர் கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.

05.பிபில பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்ணொருவர், கண்டி வைத்தியசாலையில் கடந்த 19ம் திகதி உயிரிழந்துள்ளார்.

06.குருதலாவ பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவர், முல்லேரியாவ வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

07.பிடகோட்டே பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவர் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 19ம் திகதி உயிரிழந்துள்ளார்.

08.குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண்ணொருவர், குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 14ம் திகதி உயிரிழந்துள்ளார்.

09.இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 90 வயதான ஆண்ணொருவர், பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நேற்று உயிரிழந்துள்ளார்.

10.ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்ணொருவர், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »