Our Feeds


Wednesday, February 24, 2021

www.shortnews.lk

கிண்ணியாவில் முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்டது - 79 வயதுடைய நபர்

 



(மூதூர் நிருபர்)


திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை மாவட்டத்தின் முதலாவது கொரோனா மரணம் பதிவானதாக கிண்ணியா தள வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தனர். இவரது உடல் திருகோணமலை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

குறித்த நபர் கிண்ணியா அடப்பனார் வயல் பிரதேசத்தை சேர்ந்த 79 வயது ஆண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி தனியார் வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக சென்ற நிலையில் வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவரால் அரச வைத்தியசாலைக்கு மாற்றி சிகிச்சை வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அன்று மாலை கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நீரழிவு, இதயநோய் அதிகரித்த நிலையில் அவருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்19 உறுதிப்படுத்தப்பட்டதாக கிண்ணியா தள வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த நோயாளி செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணியளவில் உயிரிழந்தார். மரணித்த நபரின் உடல் (ஜனாஸா) செவ்வாய்க்கிழமை பி.ப 1.30 மணியளவில் திருகோணமலை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »