நேற்றைய தினம் (21) நாட்டினுள் 519 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை 122 ஆக பதிவாகியிருந்தது.
மேலும் கண்டி மாவட்டத்தில் 85 பேரும், கம்பஹாவில் 64 பேரும் பதிவாகியிருந்ததாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் பதிவான தொற்றாளர்களில் 23 பேர் சிறைச்சாலை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் 495 பேர் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 79,999 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு நேற்றைய தினம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய 5,255 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 74,299 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
