Our Feeds


Friday, February 26, 2021

www.shortnews.lk

சட்டக் கல்லூரி மாணவனை தாக்கிய பொலிசார் - பணி நீக்கம் செய்து விசாரனை நடத்த அமைச்சர் உத்தரவு

 



சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவிட்டுள்ளார்.


மிகார குணரத்ன என்ற சட்ட துறை மாணவனை நேற்று (23) பேலியகொட பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸிற்கு அழைத்து வந்த சந்தேக நபரை சந்திப்பதற்காக அவர் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதுடன் இதன்போது சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »