Our Feeds


Monday, February 22, 2021

www.shortnews.lk

ரஞ்சன் ராமனாயக்கவுக்கு சிறையில் உயிர் ஆபத்துள்ளது. - சிறையில் ரஞ்சனை சந்தித்த பின் சஜித் கருத்து

 



ரஞ்சனின் பாராளுமன்ற இருக்கை பாதுகாப்பானது, ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ரஞ்சன் அவரது நிலை குறித்து விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) காலை அங்குனகோலாபெலஸ்ஸ சிறைக்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நிலை குறித்து சுக துக்கங்களை விசாரித்து அறிந்து கொண்டார்.


தற்போதைய சட்ட நிலைமையை விளக்கிய சஜித் பிரேமதாச, சபாநாயகர்,ரஞ்சன் ராமநாயக்கவை உடனடியாக நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று கூறினார்.  சிறையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயிர் ஆபத்து உள்ளது என்றும், இந்த விஷயத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.  ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தனது கட்சி எப்போதும் முன் நிற்கிறது என்றும் அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »