உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு நிராகரித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (25) இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
