Our Feeds


Tuesday, February 16, 2021

www.shortnews.lk

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு

 



நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியான 208 பேருடன் கம்பஹா மாவட்டத்தில் பதிவான மொத்த தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 15,363 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் மாவட்ட ரீதியில் அதிகளவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 179 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்படி, அந்த மாவட்டத்தில் இதுவரை பதிவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 27,940 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், இரத்தினபுரியில் 82 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 63 பேருக்கும், கண்டியில் 66 பேருக்கும், குருநாகலில் 45 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 29 பேருக்கும் மாவட்ட ரீதியில் அதிகளவில் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானதாக கொவிட் 19ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »