மிக வேகமாக பரவும் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள புதிய கொவிட் வீரியம் கொண்ட வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு, தேவையற்ற பயணங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு மாநகர சபையின் பிரதம பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் அடையாளம் காணப்பட்ட புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ், கொழும்பு நகருக்குள் பரவியிருக்கும் என்ற அச்சத்தை அடுத்தே, அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்படி, திருமண நிகழ்வுகள், பிறந்தநாள் நிகழ்வுகள், இரவு நேர களியாட்ட நிகழ்வுகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இயலுமான அளவு சன நெரிசலான இடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் கொழும்பு மாநகர சபையின் பிரதம பொது வைத்திய சுகாதார அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி கோரிக்கை விடுக்கின்றார்.
