Our Feeds


Wednesday, February 17, 2021

www.shortnews.lk

குழந்தைகளுக்கான வழிகாட்டல்களை வழங்குவது பெற்றோர்களது பொறுப்பாகும் - இஸ்திஹார் இமாதுத்தீன்

 



கசாவத்தை ஆரம்பப் பாடசாலையின் 2021 க்கான முதலாமாண்டு புதிய மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப விழா நேற்றைய தினம்  நடைபெற்றது. 


இவ்விழாவுக்கு அக்குறணை ஜம்இய்யதுல் உலமாவின் உப செயலாளர் மௌலவி ஷியாம் அவர்களுடன், பிரதான அழைப்பாளராக அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள் கலந்து கொண்டார். கூடவே பிரதேசவாசிகளும் பெருமளவில் கலந்து கொண்டனர்.


“சுத்தமான மண்ணைப் பிசைந்து அழகிய கலைநயம் பொருந்திய மண் குடத்தை உருவாக்க முடியும் என்பது போல், சிறார்களும் தாம் அடியெடுத்துவைக்கும் கல்வி எனும் களம் எதில்காலத்தில் முறையானதாகவும் அழகாகவும் அமைத்துக் கொள்வதற்குரிய வழிகாட்டல்களை வழங்குவது பெற்றோர்களது பொறுப்பாகும் என தவிசாளர் அங்கு ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »