புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபை இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொறுத்தமற்றதென மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவற்றை மீள் ஏற்றுமதி செய்யும் வரையில் அந்த மூன்று நிறுவனங்களுக்கும் சீல் வைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
