மாற்றுத் திறனுடைய ஒரு பிள்ளையின் குடும்பத்துக்கு ஊக்கமளித்து எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டும் வகையில் உக்கல கிராம சேவகர் பிரிவில் உள்ள திரு. விமலரத்ன அவர்களுக்கு, அரசினால் செயல்படுத்தப்பட்டுவரும் "உங்களுக்கொரு வீடு, நாட்டுக்கொரு நாளை" எனும் வேலைத்திட்டத்திற்கமைய வீடொன்று நிர்மாணித்துக் கையளிக்கப்பட்டது.
10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டினை அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ இஸ்திஹார் இமாதுதீன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. இதன் போது அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் அஸ்மீர் அலி அவர்களும் ஏனைய அரச அதிகாரிகளும் பங்குபற்றினர்.
