கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1405ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 42 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மே மாதம் 14ம் திகதி முதல் நேற்றைய தினம் (29) வரையான காலப் பகுதியில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் விபரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி மே 14ம் திகதி முதல் மே 28ம் திகதி வரை 36 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நேற்றைய தினம் 6 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹட்டன், நாவலபிட்டி, மஸ்கெலியா, கண்டி, பலாங்கொடை, பதுளை ஆகிய மலையக பகுதிகளில் 10ற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
மேலும், யாழ்ப்பாணம் பகுதியில் நேற்று ஒரு கொவிட் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
