நுவரெலியா − ஹாவாஎலிய பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிப் புரியும் 149 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கி பழகிய சுமார் 300 பேர் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் 3800ற்கும் அதிகமான தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
