Our Feeds


Sunday, May 30, 2021

www.shortnews.lk

2022 ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் விண்ணப்ப படிவம் , ஆலோசனைகள் வெளியீடு!

 



(இராஜதுரை ஹஷான்)


2022ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கான மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப்ப படிவம் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கோவை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பப்படிவத்தையும் ஆலோசனை கோவையையும் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பார்வையிட முடியும்.

      

இதன் பிரகாரம் பிள்ளைகளை முதலாம் தரத்துக்கு பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பெற்றோர் அல்லது பிள்ளைகளின் உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாவலர்கள் பாடசாலை அதிபருக்கு அடுத்த மாதம் 30ஆம் திகதிக்குள் கையளிக்க வேண்டும் .

விண்ணப்பங்களை அஞ்சல் ஊடாக பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைத்தல் அவசியாகும். விண்ணப்பங்களை நிரப்புவதற்கு முன்னர் ஆலோசனை அறிவுறுத்தல்களை முழுமையாக வாசித்தல் கட்டாயமாகும். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியாகும்போது பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளும் பிள்ளை 5 வயதை முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்

அதனை உறுதிப்படுத்துவதற்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் மூலப் பிரதியை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 6 வயதோ அல்லது அதற்கு அதிகமான வயதல்லையை கொண்ட மாணவர்களை முதலாம் தரத்திற்கு இணைத்துக் கொள்வதானது 6 வயதுக்கு குறைவான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னரே முன்னெடுக்கப்படும்.

முதலாம் தரத்துக்கு நேர்முக பரீட்சை ஊடாக 35 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 5 பிள்ளைகளையும் இணைத்துக் கொள்ள முடியும். வகுப்பறை ஒன்றுக்கு 40 மாணவர்களை மாத்திரம் உள்வாங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »