அஸ்ர்டாசேனிகா கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்காக 10 லட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள போதிலும், அந்த தடுப்பூசிகளை எந்த நாட்டிடமிருந்து பெற்றுக்கொள்வது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இதுவரை கலந்துரையாடல் மட்டத்திலேயே காணப்படுவதாக அறிய முடிகின்றது.
அஸ்ர்டாசேனிகா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுமார் 7 லட்சம் பேருக்கு, இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 40 லட்சம் சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளையும், 10 லட்சம் அஸ்ர்டா சேனிகா தடுப்பூசிகளையும் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இதற்காக 22 கோடி அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
