Our Feeds


Friday, May 21, 2021

www.shortnews.lk

வைத்தியரின் தாய், கொரோனா வைரஸ் தொற்றில் உயிரிழப்பு

 



கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரின் தாய், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் சந்திக்க எபிடகடுவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பிய நிலையில், அவரது தாய்க்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி, வைத்தியரின் தாய் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, சுகாதார ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »